ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தண்ணீருக்கு இரத்தம்:  ரா.பார்த்தசாரதி

Updated On :19 செப்டம்பர் 2016, 11:57 am
உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதேஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே ,வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே,தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே !சுதந்திரம் அடைந்ததது முதல் நதிநீர் இணைப்புஇன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு,நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதேவிவசாயிகளும் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நீயமானதே !வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லைஇது பொதுதுறைக்கும் மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லைநீதி கேட்டும், சமரசம் செய்தாலும், பிரச்சனை தீர்ந்தபாடில்லைவன்முறையால் எதையும் தீர்க்க முடியாது என தெரியாமலில்லை !நடுவர் சொல்லுக்கும், நீதிபதி தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவேண்டும்,நீதியை நிராகரித்தால் எந்த மாநிலமும் துன்பப்படவேண்டும்இருவர் கூடி சமரசத்தால்  ஓர்   சமாதானம் ஏற்படவேண்டும்இதனால் இருவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் !மக்களின் பொதுநலம் கருதியே நதிநீர் தீட்டப்படவேண்டும்ஜாதி, அரசியல் போன்றவை கலவாமல் இருக்கவேண்டும்மாநிலங்களிடையே, ஒற்றுமை நிலவ வேண்டும்ஜாதி, இனம் இவற்றிற்கு  ஊறு விளையாமல் இருக்கவேண்டும் !நதிநீர் பங்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்கவேண்டும்மாநிலங்களின் பிரச்சனைகளை ஒன்றுகூடி  தீர்மானிக்கவேண்டும்நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர் மொழியாகும்நீரே மக்களின் தேவைக்கும், உணவிற்கும் இன்றியமையாததாகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.